Wednesday, 22 June 2011

Koddiyaram Poem by Prof Sukumar.mpg

கொட்டியாரம்-1

கொட்டியாரம் -2

கொட்டியாரம் இலக்கிய மரபுகள்' நூல் மண்ணின் சிறப்புகளை உலகறியச் செய்யும்

கொட்டியாரம் இலக்கிய மரபுகள்' நூல் மண்ணின் சிறப்புகளை உலகறியச் செய்யும் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் இரவிச்சந்திரன்
"கொட்டியாரம் இலக்கிய மரபுகள்' நூல் மண்ணின் சிறப்புகளை உலகறியச் செய்யும் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் இரவிச்சந்திரன்
கொட்டியாபுரப் பற்று மண்ணிலே நிறைந்துள்ள ஆற்றல் மற்றும் கலைச்சிறப்புகளை உலகறியச் செய்தவர் கிழக்கப் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் கலைப்பிரிவு பீடாதிபதியான பாலசிங்கம் பாலசுகுமார் என்று கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.இரவிச்சந்தின் தெரிவித்தார்.

பாலசுகுமாரின் “கொட்டியாரம் இலக்கிய மரபுகள்’ என்ற நூல் மற்றும் அவரது பாடல் இறுவெட்டு ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்வு மூதூர் கிழக்கு சேனையூர் மத்தியகல்லூரியின் கலாசார மண்டபத்தில் கல்லூரி அதிபர் இரா.இரத்தினசிங்கத்தின் தலைமையில் நடைபெற்றது.
2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின்போது உயிரிழந்த பாலசுகுமாரின் புதல்வியின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வரும் அனாமிக்கா பதிப்பகத்தின் பதினாறாவது வெளியீடாக "கொட்டியாரம் இலக்கிய மரபுகள்' நூல் வெளியீடு அமைகின்றது. விரிவுரையாளர் இரவிச்சந்திரன் தெடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;

பாலசுகுமார் பன்முக ஆளுமையைக் கொண்ட ஆசான். தம்மிடம் கற்றவர்களுக்கு அறிவு ரீதியாக ஆலோசனை கூறி வழிநடத்தியுள்ளார். கொட்டியாரம் மண்ணின் வரலாற்றை, அதன் பெருமையை அறிந்து கொள்வதற்கு இவ்வெளியீடு வரலாற்று மாணவருக்கு உதவும். பாலசுகுமாரால் எழுதப்பட்ட பாடல்கள் இந்தியாவில் இசையமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு இறுவட்டாக இங்கு வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

வெளியீட்டு நிகழ்வை ஒழுங்கு செய்திருந்த கலைஇலக்கிய அமைப்பின் தலைவரும் அதிபருமான வி.நவரட்ணராஜா தனது வரவேற்புரையில் பாலசுகுமார் லண்டனில் வாழ்ந்து வந்தாலும் அவரது எண்ணம், உணர்வுகள் கொட்டியார மண்ணில்தான் உள்ளன. அவர் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் அவரின் நூல் மூலம் அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றார். பாலகுமார் லண்டனிலிருந்து ஒளித்திரை மூலம் நேரலையாக நிகழ்வில் உரையாற்றினார்.

முதன்மை அதிதியாக மூதூர் வலயக்கல்வி அலுவலகம் திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் சி.சிறிதரன் பங்குபற்றினார். ஆய்வுரைகளை விரிவுரையாளர்கள் இரவிச்சந்திரன், எஸ்.குகன் ஆகியோர் நிகழ்த்தினர். இறுவட்டை இரவிச்சந்திரன் வெளியிட்டார். அவற்றை பாலசுகுமாரின் தயார் பாலசிங்கம் தெய்வநாயகி, மாமியார் திருமதி சோமசுந்தரம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்வில் மூதூரின் மூத்த இலக்கியவாதி எம்.எஸ்.அமானுல்லா உட்பட கல்விமான்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்குபற்றினர். அனாமிகா பதிப்பகத்தினால் வெளியிடப்படும் இலக்கிய ஆக்கங்களினால் வரும் நீதியின் கொட்டியாரத்தில் நூலகம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

Sunday, 19 June 2011

வலிகளால் ஒரு வரலாற்று தேடல்

'அனாமிகா' பதிப்பகத்தின் பதினைந்தாவது வெளியீடாக விளைந்த 'கொட்டியாரம் இலக்கிய மரபு' எனும் தொகுப்பு நூல் ஒரு வரலாற்றின் தடங்களை, தமிழின் பண்பாடு மற்றும் கலாசாரங்களை வெளிக்கொணரும் ஓர் ஆவணப்படுத்தலின் ஆரம்பமாக வெளிவந்துள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைகலாசார பீடாதிபதி பாலசுகுமார் அவர்களின் மற்றொரு அடயாளப் பொக்கிசமான 'கொட்டியாரம்' தொகுப்பாக அமைந்த இந்நூலில் பிரமிளா சுகுமார் அவர்களின் அற்புதமான பதிப்புரையே செல்வச்சிறப்பு மிக்க எழில்கொஞ்சும் எல்லா வளமும் கொண்ட அந்த கொட்டியாரப்பூமியின் மண்ணின் மணத்தைச் சொல்லும் அழகு அருமை.
எல்லோருக்கும் கிட்டாது என நினைக்கிறேன். தோட்டங்கள், பண்படுத்திய நிலம், விளைந்த நெல்மணிகள் என்றும் மருதம், நெய்தல், முல்லை மூன்றும் குழைந்து எழுந்த அந்த புன்னிலம் 'கள்ளம் கபடமில்லாம நல்ல மக்கள், மரியாதை, பண்பு, உபசரிப்பு என்று எல்லா பழக்கங்களும் என்னுள் வந்து செறிய' என்ற வசனமே அத்தனை நெருசல்களில் அகப்பட்ட மனதை இலகுவாக்கி மண்ணின் பெருமையை பறைசாற்றும்.

அடுத்து முன்னுரையை பாலசுகுமார் அவர்கள் அழகாக தொகுத்து இருக்கிறார். தாய்நிலத்தின் தொன்மையையும் அதனோடு இணைந்த அத்தனை ஊர்களையும் அவற்றின் சிறப்புக்களையும் சொல்லும் அழகில் நமக்கு அந்த நிலத்தை சென்றுவந்த ஒர் உணர்வு பீறிட்டு எழும். அந்த அழகும் வளமும் நிறைந்த நித்திலத்தை வாசிப்பில் நுகரமுடியாது உணர்வின் உரசல்களில் தான் அந்த கனம் தெரியும். ஆனாலும் முன்னுரையே முழுசாக விளைந்த நெல்மணியாகிறது.

கொட்டியாரம் வரலாற்று அறிமுகம் என்று ஆரம்பிக்கும் வரலாற்று ஆய்வில் கிறிஸ்துவுக்கு முன்னைய மற்றும் பிந்திய காலப்பகுதியில் சான்றுகளை விளக்கி கொட்டியாரத்தின் புராதனத்தை அதன் தொன்மையை வெளிக்கொணர கல்வெட்டுக்கள், இலக்கியங்கள், செப்பேடுகள், பழைய கட்டட சிற்ப மற்றும் இடிபாடுகள் என்று அத்தனை விடயங்களினூடு சான்றுகளை அடுக்கிக்கொண்ட கட்டுரை அற்புதமான ஆய்வாகவும் அதனிறுதியில் சொல்லியிருக்கும் ' கொட்டியாரத்தின் வரலாறு தனியொரு நூலாக வருகிறபொழுது மேலும் விரிவான விளக்கங்களைப் பெறமுடியும். இது ஒரு அறிமுகக்குறிப்பே' என்று சொல்லும் போதே இந்நூலின் தொடர்ச்சியானதன்மையை வெளிக்காட்டிநிற்கிறது.

கொழும்புப் பல்கலைக்கழக பொருளியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் எழுதிய 'கொட்டியாரப்பற்றுப் பிரதேசத்தின் பொருளாதார வளவாய்ப்புக்கள்' என்ற ஆய்வுக கட்டுரையில் இம்மானிலத்தின் செல்வச்செழிப்பான பொருளாதாரத்தை, பொருளாதார அபிவிருத்தியை எவ்வாறு மக்கள் மேற்கொள்கின்றனர் என்பதை தௌ்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

அடுத்து மண்சார்ந்த மக்கள் என்ற சொற்றொடரே மக்களின் காலக்கண்ணாடியாக இருக்கும் இலக்கியங்களின் அத்தனை வெளிப்பாடுகளையும் மக்கள் எவ்வாறு எவ்வகையான இலக்கியங்களை மேற்கொண்டனர் என்பதை மண்மொழி இலக்கியங்கள், மரபுசார் சிற்றிலக்கியங்கள், தொல்சீர் இலக்கியங்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் நாடகம் என்னும் பகுப்புக்களாகப் பிரித்து அழகாக எளிமையாக சிறப்பாக முற்குறிப்போடு சொல்லியிருக்கும் பாங்கு இந்நூலின் மற்றொரு சிறப்பு. 'மண்மொழி இலக்கியங்களில்' கிழக்குமாகாணத்துக்கே தனித்துவமான நாட்டார் இலக்கியக்கூறுகள் பலவற்றின் சிலவற்றை இப்பகுப்பில் காணலாம். உழவு, கொம்பு, வசந்தன், கும்மி, கும்ப விழா போன்றவற்றில் இடம்பெறும் பாடல்களில் சிலவற்றை அச்சுருவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல் பள்ளு, குறவஞ்சி, உலா போன்ற மண்சார் மரபிலக்கியங்களில் காணப்படும் குளிர்த்தி, காவியம், தாலாட்டு, அகவல், மான்மியம், ஊஞ்சல் போன்றவை மரபுசார் சிற்றிலக்கியங்களின் சில கொட்டியார மண்ணின் மைந்தர்களால் பாடப்பட்ட காவியங்கள், அம்மன் பாடல்கள் என்பன இப்பகுப்பில் அடங்குகின்றன. இங்கே யுத்த சூழ்நிலைகளால் அழிந்துபோனவைகள் போக மீதியில் பொறுக்கி எடுக்கப்பட்டவைகளின் சிலவற்றை இங்குகாணலாம். ' காலம் அழித்ததுபோக மீதியாக இருப்பற்றை தேடிப்பாதுகாக்க வேண்டும். அதற்கான முயற்சியில் இளம் சந்ததியினர் ஈடுபடவேண்டும்' என்று சொல்லும்போதே இளம் சமுதாயத்துக்கு விடப்பட்டுள்ள இந்த இலக்கியச் சங்கிலித் தொடரை தொடர்பறா நிலையில் பேணவேண்டும் என்பதை காட்டிநிற்கிறது.

அடுத்து இடம்பெறும் தொல்சீர் இலக்கியங்கள் என்ற பகுப்பில் தமிழில் வழியான காவியமரபு பற்றிக்குறிப்பிட்டு அங்கே கொட்டியாரத்தில் வருடந்தோறும் நடைபெறும் ஆடிஅமாவாசை விழாவில் படித்து பயன்சொல்லும் திருக்கரைசைப் புராணத்தின் சில அழகான பாடல்களை அச்சுருவேற்றம் செய்தமை அற்புதம்.

நாவல்கள் என்ற பகுப்பில் முழுமையாக எந்த நாவலும் இடம் பெறாமல் சில நாவல்களின் சுவைமிகு குறிப்பிட்ட பகுதிகளை இணைக்கபட்டுள்ளது. கலாநிதி வ.அ.இராசரெத்தினத்தின் வாழ்வின் கண்ணாடியான நாவல்களில் இப்பிரதேசத்து சிறப்பையும் வரலாற்றையும் எடுத்தியம்பக்கூடியதாக இருப்பதனால் அவரது நாவல்களின் ஒரு சில பகுதிகளை இப்புத்தகத்தின் வாயிலாக நாம் காணலாம். அடுத்து சிறுகதைகள் என்ற பகுப்பு. இங்கே ஈழத்து சிறுகதைகளின் ஆரம்ப படையல்களைத் தந்த இலங்கையர்கோன் கொட்டியாரப்பிரதேசத்தில் அரச அதிகாரியாக கடமைபுரிந்தவர் என்பது குறிப்பிட்டு சொல்லக்கூடிய விடயம் என்பது அவரது சிறுகதைகளில் மண்ணின் நடத்தைசார் பாதிப்புகளை எடுத்துக்காட்டியதை கொட்டியாரத்தின் சிறப்பை நுகரலாம். அத்தோடு சிறுகதைகளுக்கு மேற்கோள் காட்டும் வண்ணம் 'ஈழத்து சிறுகதை மன்னன்' கலாநிதி வ.அ. இராசரெத்தினம் அவர்களதும், மூதூர் அ.ச. பாய்வா மற்றும் கேணிப்பித்தன் அவர்களதுமான சில சிறுகதைகளை கொண்ட இப்புத்தகம் மெருகேறி வாசிக்கத்தூண்டும் ஒரு இலக்கியப்படைப்பாக நிற்கும்.

'கவிதைகள்' என்கிற பகுப்பில் மரபு மற்றும் புதுக்கவிதைகளை ஆக்கிய அத்தனை கொட்டியாரப்படைப்பாளிகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டும் முனைப்பில் அப்படைப்பாளிகளின் சில சிறப்பான கவிதைகளை காலத்தின் வடுக்களில் கொட்டியாரம் பட்ட அவஸ்தைகளையும் சமூகத்தின் அத்தனை காலப்பகுதிகளிலும் அடைந்த துயரங்களையும் கண்முன்னே கொண்டு வந்து கண்களில் கண்ணீரை உதிர்க்கும் மனதையும் நெஞ்சில் கனத்தையும் காட்டிநிற்கும் கவிதைகளுக்கு ஒரு வணக்கம்.

கடைசியில் பண்பாட்டுக்கலைகளின் வளர்ச்சியில் ஒரு தமிழ்க்கிராமத்து மண்ணின் வெளிப்பாடாக எழுந்த 'கூத்து' அக்கொட்டியாரப்பூமியிலும் அண்ணாவிமார்களால் பயிற்றப்பட்டு அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எழுந்த நாடகக்கலைகளை கொட்டியாரப் பிரதேசமும் கட்டிக்காத்து பல இசைக்கழகங்களால் மேடையேற்றப்பட்டன என்பதை நிரூபிக்கும் வண்ணம் அப்பிரதேசத்தில் எழுந்த நாடகங்களில் சிலவற்றை இத்தொகுப்பில் இணைத்து ஒரு பண்பட்ட கலாசாரத்தின் தமிழின் இன்ப இலக்கியங்ளை வெளிக்கொணர்ந்து மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்ட இந்த தொகுப்பு நூல் இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு தமிழ் இலக்கிய வாண்மையைக் கொண்டுசெல்லக்கூடிய தன்மையைக் காட்டி நிற்கிற

Friday, 17 June 2011

கவிஞர்.இரா.இரத்தினசிங்கம்

கவிஞர்.இரா.இரத்தினசிங்னம்



இவரது முழுப்பெயர் இராமலிங்கம் இரத்தினசிங்கம். தாய் அன்னப்பிள்ளை. கவிஞருடைய தந்தையின் பரம்பரையினர் மிகுந்த கலையார்வம் கொண்டவர்கள்.
இவர் மூதூர் பிரதேசத்தில் உள்ள சேனையூரில் 1956.02.02 இல் பிறந்தார். இங்குள்ள மத்திய கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றும் இவர் 1972 இல் தனது கன்னிக் கவிதையை எழுதினார். நூற்றுக்கணக்கான மரபுக் கவிதைகளை யாத்த இவர், தற்போது கருத்தாளமுள்ள புதுக்கவிதைகளையும் புனைகிறார்.
வெளிச்சம் பண்பலையில் இவரது கவிதைகள் 'கவிதைக்கோர் கானம்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன.
சேனையூர் இரா.இரத்தினசிங்கம் எனும் பெயரில் வீரகேசரி,தினகரன் போன்ற பத்திரிகைகளில் இவரது கவிதைகள் பிரசுரமாகின.
இவர் கவிஞர் மட்டுமின்றி நாடகாசிரியருமாவார். பாடசாலை தமிழ்மொழித் தினப் போட்டிக்காக பல இலக்கிய நாடகங்களை எழுதியுள்ளார். 1994 இல் இவர் எழுதி நெறிப்படுத்திய 'பாஞ்சாலி சபதம்" எனும் நாடகம் அகில இலங்கை போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டது.
படிப்போரை மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் கவிதைகள் அடங்கிய இவரது கவிதை நூல் விரைவில் வெளிவரவுள்ளமை மனதுக்கு மகிழ்வைத் தருகின்றது.
முயற்சி வெற்றி பெற நாமும் வாழ்த்துகின்றோம்.

Thursday, 16 June 2011

தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், த.வி. கூட்டணியின் அமைப்பு நிர்வாகச் செயலாளரும், திருகோணமலை சிவானந்த தபோவன சிறுவர் இல்லத்தைப் பரிபாலிக்கும் நாகரத்தினம்பிள்ளை தங்கம்மாள் நம்பிக்கை நிதியத்தின் பிரதான நம்பிக்கைப் பொறுப்பாளரும் - பொருளாளருமான மறைந்த அருணாசலம் தங்கத்துரை பா.உ அவர்களும் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி. இராஜேஸ்வரி தனபாலசிங்கம், நாமகள் கல்லூரி அதிபர் திரு. சி. ஜோசப், கொழும்பு அதிபர் கா. சீவரத்தினம், பொறியியலாளர் திரு. வெ. ரட்ணராஜா சமூகசேவகர் பெ.சி. கணேசலிங்கம் ஆகிய அறுவரும் 05.07.1997 சனிக்கிழமை மாலையில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புதிய 3 மாடிக்கட்டடத் திறப்புவிழா முடிவுற்ற பின்னர் இடம் பெற்ற குண்டுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் எனது வாழ்நாளில் ஒரு

Friday, 3 June 2011

ஒரு உண்மை

ஒரு உண்மை

மரணவீடு என்று சொல்வதற்குரிய அறிகுறிகளுடன் ஒரு வீடு,வீட்டுவாசலில் மரண அறிவித்தலில்
……………………………………………………………………………………………………………………………… சரவணன்;(லண்டன்)விமலநாதன்(பிரான்ஸ்)ஆஞ்சலி (அவுஸ்ரெலியா) சந்தியா (சுவிஸ்)கமலா (கனடா)பாலச்சந்திரன் ;(லண்டன்)வித்தியா (சுவிஸ்)அமுதன் (அவுஸ்ரெலியா) ஆகியோரின் தந்தையும்ஆவார்……………………………………………………………………………………………………………………………… பல பிளாஸ்திக் கதிரைகளில் சில கதிரைகளில் சிலர் நாட்;டுநடப்பை பற்றி கதைத்துக் கொண்டு இருக்கின்றனர். அவ்இல்லத்தின் சூழ்நிலை தெரியாமல் தொலைபேசியும் சினுங்கிக் கொண்டு இருந்தது.தொலை பேசியின் சினுங்கலை தாங்க முடீயாத ஒருவர் தொலைபெசியை எடுத்து
‘கலோ’ என்றார்.
(மறுபக்கத்தில்) “கலோ சிவராசா சித்தப்பாதானெ கதைக்கிறது,”(இப்பக்கம்) “ஓம் நான்தான் கதைக்கிறன்”

(மறுபக்கம்) “நான் விமலநாதன் கதைக்கிறன்,”
சித்தப்பா என்னால வர ஏலாது,இங்க நான் அகதியா பதின்சிஇருகிறதால எனக்கு இலங்கைக்கு விசா தரமாட்டங்க,நான் எவ்வளவு காசு வேணும் எண்டாலும் அனுப்புறன் அப்பாட சடங்க ஒழுங்கா செய்யுங்க….அம்மாவால இப்ப கதைக்க ஏலாது என்டு எனக்கு தெரியும்
அப்பாவ பாக்;க வேணும் skypeலகாட்ட ஏலுமெ?

(இப்பக்கம்); “ஓம் தம்பி நான் எல்லாததையும் பாத்துக்கொள்ளுறன் எதுக்கும் கொஞ்ச காசு போட்டு விட்டா நல்லம் தம்பி!என்ர கைக்காச போட்டு கோஞச வேலை முடிச்சித்தன்! தம்பி என்ர accountla காச போட்டு விடுங்களன்;” என்று தனது பேச்சை தொடர்ந்தார்………..
தனது உடன் பிறந்த அண்ணனின் இறப்பை வியாபாரமாக மாற்றி தனது காசுப்பையை நிரப்ப நினைத்த சிவராசா அதை வெற்றிகரமாக முடித்து அழைப்பை துண்டித்தார்.

மறுபடியும் தொலைபெசி சினுங்கியது மறுபடியும் சிவராசா தொலைபெசியை எடுக்க, (மறுபக்கம்) ‘அழுகையுடன் தொடங்கியது அஞ்சலியின் உரையாடல் அதெ உரையாடல் அதெ சிவராசாவின் வியாபாரப் பேச்சும் தொடர்ந்தது………………..
இவ்வாறு ஒவ்வோரு பிள்ளைகளும் தங்களது தந்தையின் இறுதி சடங்கினை செய்ய தமது சித்தப்பாவிடம் ஒப்பந்தம் செய்து முடித்தனர்..


வரவேற்பு அறையில் தனது கணவனின் அசைவில்லா முகத்தை அழுது அழுது கண்ணீர் வற்றிய தனது கண்களால் பார்த்துக் கொண்டு இருக்க,….அறையின் மூலையில் வழமையாக தன்னுடன் விளையாடும் தனது எஜமான் அசைவின்றி இருப்பதை பார்த்த நாயும் தனது எஜமானை பார்த்துக் கண் நீர்விட்டுக் கொண்டு இருந்தது…………………..

இக்கரையில் அனாதைப் பிணமாய் தந்தை அக்கரையில் அகதியாய் பிள்ளைகள்”

(பெயர்களைத் தவிர யாவும் உண்மை )
கா.செந்தூர