கொட்டியாரம் இலக்கிய மரபுகள்' நூல் மண்ணின் சிறப்புகளை உலகறியச் செய்யும் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் இரவிச்சந்திரன்
"கொட்டியாரம் இலக்கிய மரபுகள்' நூல் மண்ணின் சிறப்புகளை உலகறியச் செய்யும் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் இரவிச்சந்திரன்
கொட்டியாபுரப் பற்று மண்ணிலே நிறைந்துள்ள ஆற்றல் மற்றும் கலைச்சிறப்புகளை உலகறியச் செய்தவர் கிழக்கப் பல்கலைக்கழகத்தின் முன்னைநாள் கலைப்பிரிவு பீடாதிபதியான பாலசிங்கம் பாலசுகுமார் என்று கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.இரவிச்சந்தின் தெரிவித்தார்.
பாலசுகுமாரின் “கொட்டியாரம் இலக்கிய மரபுகள்’ என்ற நூல் மற்றும் அவரது பாடல் இறுவெட்டு ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்வு மூதூர் கிழக்கு சேனையூர் மத்தியகல்லூரியின் கலாசார மண்டபத்தில் கல்லூரி அதிபர் இரா.இரத்தினசிங்கத்தின் தலைமையில் நடைபெற்றது.
2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின்போது உயிரிழந்த பாலசுகுமாரின் புதல்வியின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வரும் அனாமிக்கா பதிப்பகத்தின் பதினாறாவது வெளியீடாக "கொட்டியாரம் இலக்கிய மரபுகள்' நூல் வெளியீடு அமைகின்றது. விரிவுரையாளர் இரவிச்சந்திரன் தெடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்;
பாலசுகுமார் பன்முக ஆளுமையைக் கொண்ட ஆசான். தம்மிடம் கற்றவர்களுக்கு அறிவு ரீதியாக ஆலோசனை கூறி வழிநடத்தியுள்ளார். கொட்டியாரம் மண்ணின் வரலாற்றை, அதன் பெருமையை அறிந்து கொள்வதற்கு இவ்வெளியீடு வரலாற்று மாணவருக்கு உதவும். பாலசுகுமாரால் எழுதப்பட்ட பாடல்கள் இந்தியாவில் இசையமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு இறுவட்டாக இங்கு வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
வெளியீட்டு நிகழ்வை ஒழுங்கு செய்திருந்த கலைஇலக்கிய அமைப்பின் தலைவரும் அதிபருமான வி.நவரட்ணராஜா தனது வரவேற்புரையில் பாலசுகுமார் லண்டனில் வாழ்ந்து வந்தாலும் அவரது எண்ணம், உணர்வுகள் கொட்டியார மண்ணில்தான் உள்ளன. அவர் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் அவரின் நூல் மூலம் அது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றார். பாலகுமார் லண்டனிலிருந்து ஒளித்திரை மூலம் நேரலையாக நிகழ்வில் உரையாற்றினார்.
முதன்மை அதிதியாக மூதூர் வலயக்கல்வி அலுவலகம் திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் சி.சிறிதரன் பங்குபற்றினார். ஆய்வுரைகளை விரிவுரையாளர்கள் இரவிச்சந்திரன், எஸ்.குகன் ஆகியோர் நிகழ்த்தினர். இறுவட்டை இரவிச்சந்திரன் வெளியிட்டார். அவற்றை பாலசுகுமாரின் தயார் பாலசிங்கம் தெய்வநாயகி, மாமியார் திருமதி சோமசுந்தரம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்வில் மூதூரின் மூத்த இலக்கியவாதி எம்.எஸ்.அமானுல்லா உட்பட கல்விமான்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்குபற்றினர். அனாமிகா பதிப்பகத்தினால் வெளியிடப்படும் இலக்கிய ஆக்கங்களினால் வரும் நீதியின் கொட்டியாரத்தில் நூலகம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment