கவிஞர்.இரா.இரத்தினசிங்னம்
இவரது முழுப்பெயர் இராமலிங்கம் இரத்தினசிங்கம். தாய் அன்னப்பிள்ளை. கவிஞருடைய தந்தையின் பரம்பரையினர் மிகுந்த கலையார்வம் கொண்டவர்கள்.
இவர் மூதூர் பிரதேசத்தில் உள்ள சேனையூரில் 1956.02.02 இல் பிறந்தார். இங்குள்ள மத்திய கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றும் இவர் 1972 இல் தனது கன்னிக் கவிதையை எழுதினார். நூற்றுக்கணக்கான மரபுக் கவிதைகளை யாத்த இவர், தற்போது கருத்தாளமுள்ள புதுக்கவிதைகளையும் புனைகிறார்.
வெளிச்சம் பண்பலையில் இவரது கவிதைகள் 'கவிதைக்கோர் கானம்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன.
சேனையூர் இரா.இரத்தினசிங்கம் எனும் பெயரில் வீரகேசரி,தினகரன் போன்ற பத்திரிகைகளில் இவரது கவிதைகள் பிரசுரமாகின.
இவர் கவிஞர் மட்டுமின்றி நாடகாசிரியருமாவார். பாடசாலை தமிழ்மொழித் தினப் போட்டிக்காக பல இலக்கிய நாடகங்களை எழுதியுள்ளார். 1994 இல் இவர் எழுதி நெறிப்படுத்திய 'பாஞ்சாலி சபதம்" எனும் நாடகம் அகில இலங்கை போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டது.
படிப்போரை மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் கவிதைகள் அடங்கிய இவரது கவிதை நூல் விரைவில் வெளிவரவுள்ளமை மனதுக்கு மகிழ்வைத் தருகின்றது.
முயற்சி வெற்றி பெற நாமும் வாழ்த்துகின்றோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment